தனது கடை விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தவர் ஜெலண்ட் சரவணன். இவர் தற்போது நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அவர் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இந்த படத்தை இயக்கிவருகின்றனர்.
மணாலியில் ஊர்வசி ரவுத்தேலாவுடன் ரொமான்ஸ் செய்யும் லெஜெண்ட் சரவணன்! - லெஜெண்ட் சரவணன் படங்கள்
லெஜண்ட் சரவணன் மணாலியில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் நடிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீர்த்திகா திவாரி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகள் மணாலியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் லெஜண்ட் சரவணனுடன் ஊர்வசி ரவுத்தேலா இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.