தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாளை ஓடிடியில் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ - மாடத்தி

இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாடத்தி’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.

maadathy
maadathy

By

Published : Jun 23, 2021, 7:55 PM IST

லீனா மணிமேகலை இயக்கத்தில் அஜ்மினா காசிம், செம்மலர் அன்னம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மாடத்தி’. இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பாலின பேதம், ஜாதி - மத நம்பிக்கை, அதிகார அமைப்பின் வன்முறைகளுக்கு எதிராக இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது.

maadathy

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இப்படம் தங்களை இழிவுபடுத்துவதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில், நாளை nee stream ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

leena manimekalai

இதுகுறித்து இயக்குநர் லீனா மணிமேகலை நாளை கிளப் ஹவுஸில் உரையாடவுள்ளார். clubhouse.com/club/wttc என அதில் பங்கேற்க லின்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆகஸ்ட் மாதம் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு: செல்வராகவன்

ABOUT THE AUTHOR

...view details