மும்பை: இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜன.11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கரோனா பாஸிடிவ் அறிகுறிகள் முதலில் தென்பட்டன. தொடர்ந்து மும்பை (தெற்கு) பீரீச் கேண்டி மருத்துவமனையில் (Breach Candy Hospital ) அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலை குறித்து மருத்துவர் பிரதித் சம்தானி, “அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது” என்றார்.