திரையுலகில் முன்னணி நடன இயக்குநரான ஷோபி பவுல்ராஜின் மனைவி லலிதா ஷோபி. இவர் உத்தம வில்லன், பிகில், கடாரம் கொண்டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியான லலிதா ஷோபி திரைப்படம் - சுஃபியும் சுஜாதாயும்
லலிதா ஷோபி நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
![ஓடிடி தளத்தில் வெளியான லலிதா ஷோபி திரைப்படம் லலித ஷோபி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:13:56:1593783836-tn-che-07-choreographerlalithashobi-sufiandsujadhai-script-7204954-03072020184011-0307f-1593781811-384.jpeg)
லலித ஷோபி
இவர் சமீபத்தில் மலையாளத்தில், நடன இயக்குநராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்' திரைப்படம் இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெயசூர்யா, தேவ் மோகன், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்று லலிதா ஷோபி தெரிவித்துள்ளார்.