தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ரிட்டன்ஸ்! - லக்‌ஷ்மி ராமகிருஷணன் புதிய நிகழ்ச்சி

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலரும் என்னிடம் தங்களின் வாழ்க்கை பிரச்னைகளை கூறுவதும், தீர்வு கேட்பதும் தன்னை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Lakshmy Ramakrishnan

By

Published : Nov 1, 2019, 9:02 PM IST

நடிகை லக்‌ஷ்மி ராமகிருஷணன் இணையம், தொலைக்காட்சி, திரைகளில் நடிப்பால் மட்டுமன்றி, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது மூலம் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது இணையதளத்தில் 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.

லக்‌ஷ்மி ராமகிருஷணன்

இது குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘நடிப்பு, இயக்கம், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குதல் என எந்த வேலையையும் நான் நல்லபடி செய்ததற்கு நீங்கள் அளித்த ஆதரவே காரணம். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலரும் என்னை நேரிலும் இணையம் வழியும் தங்கள் பிரச்னைகளை என்னை உறவாய் நினைத்து கூறுவதும், தீர்வு கேட்பதும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லக்‌ஷ்மி ராமகிருஷணன்

இந்த ஊக்கத்தினால் நான் தற்போது “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளேன். இது முற்றிலும் நம் வாழ்வியலை மேம்படுத்தும், மதிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சி என்னை சந்தோஷப்படுத்தும் அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரின் வாழ்வை மாற்றக்கூடியதாக இருக்கும் என தீவிரமாக நம்புகிறேன். இந்நிகழ்ச்சியை பார்க்கும் உங்களையும் ஒரு மாற்றத்திற்குள் ஈர்த்து மகிழ்விக்கும்.

இந்நிகழ்ச்சியை சமுதாயத்திற்கு என் வழியில் நான் செய்யும் நன்றிக்கடனாக நினைக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவையும் எப்போதும் போல் அளிக்க வேண்டுகிறேன்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details