தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனால் வருத்தம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

என்னைத் தெரியாதது போல் சிவகார்த்திகேயன் பேசியது, மிகவும் என்னை காயப்படுத்தியது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்

சிவகார்திகேயனால் வருத்தம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
சிவகார்திகேயனால் வருத்தம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

By

Published : Apr 13, 2020, 6:22 PM IST

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, மக்கள் அனனவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அதேபோல் திரையுலகப் பிரபலங்களும் படப்பிடிப்பு இல்லாததால், தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் 'ஆக்டிவாக' செயல்பட்டு வருகின்றனர். அந்தவரிசையில், இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், சமீபத்தில் ’குறள் 786’ படத்தின் ட்ரெய்லரைப் பகிர்ந்திருந்தார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர், “எப்போது இந்த குறும்படத்தை வெளியிட்டுள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “அது குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன், என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. அவரை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. நான் அதைக் கைவிட்ட பிறகுதான் அவர் 'மெரினா' படத்தில் நடித்தார்.

'குறள் 786' படத்தில் அவருக்குச் சிறப்பான கதாபாத்திரம். ஆனால், அது இல்லாமலேயே வணிக ரீதியாகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ”சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பார்க்கும் போது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அவர் இன்று இருக்கும் நிலைக்கு அவரது திறமைகள் மட்டுமே காரணம். என்னைத் தெரியாதது போல அவர் பேசியது தான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 'குறள் 786' படத்தின்போது, அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்னுடன் பயணித்தார். அவர் என் குடும்ப உறுப்பினரைப் போன்றவர்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உதவுபவன் கையை என் அரசு தட்டிவிடுகிறது - கமல் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details