நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தாய் சரவணன் நல்லுசாமி தயாரிக்கும், இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில், விரைவில் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! திரைத் துறையை விட்டு சற்று விலகியிருந்த லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா இதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமி மேனன் ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'கும்கி' படத்தில் நடித்துள்ளார். அதேபோன்று ஸ்ரீ திவ்யாவும், 'வெள்ளக்கார துரை' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம் பிரபு நடித்துவருகிறார்.
இதையும் படிங்க:தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் லஷ்மி மேனன்