தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்? மனம் திறக்கும் மஞ்சு!

முன்னணி தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லக்‌ஷ்மி மஞ்சு, தான் ஏன் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை லக்ஷ்மி மஞ்சு
நடிகை லக்ஷ்மி மஞ்சு

By

Published : Dec 12, 2021, 7:00 AM IST

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகள் லக்‌ஷ்மி மஞ்சு. இவர் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் 'மறந்தேன் மன்னித்தேன்' திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் அதிகமாக தமிழ் சினிமாவில் தலைகாட்டவில்லை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்?” என்ற கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார்.

நடிகை லக்ஷ்மி மஞ்சு

நல்ல ரோலுக்கு ஓகே

நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பேசுகையில், “தமிழ் படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன். இதுவரை வந்த எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை. அதேபோல் இப்படிதான் நடிப்பேன், இப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிப்பேன் என சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை என்னை பலர் அணுகாததற்கு, ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது நான் பெரிய நடிகரின் மகளாக இருப்பதால்தான், என்னை ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்துக்கொள்வேனோ? என்னை வைத்து எப்படி படமாக்குவது என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.

என்னை பொருத்தவரை நான் நடிகையாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், நடிகையாக மட்டுமே இருப்பேன். அதனைவிடுத்து நடிகர் மோகன் பாபுவின் மகளாகவோ அல்லது ஒரு தயாரிப்பாளராகவோ நடந்து கொள்ள மாட்டேன்.

இதுவரை அப்படித்தான் இருக்கிறேன், இனியும் அப்படித்தான் இருப்பேன். நான் பல மொழிகளில் நடித்து வந்தாலும், தமிழ் திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு” என தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் நடிகை லக்ஷ்மி மஞ்சுவை தமிழ் சினிமாக்களில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மாநாடு சாட்டிலைட் உரிமை விவகாரம்; டி.ராஜேந்தர் வைத்த 'ட்விஸ்ட்'!

ABOUT THE AUTHOR

...view details