முக்குழி மூவிஸ் வழங்கும் ஜெயராமன் தயாரிப்பில் கலையரசன் இயக்கியுள்ள திரைப்படம் 'குழலி'. இப்படத்தில் 'காக்கா முட்டை' விக்னேஷ் நாயகனாகவும் ஆரா நாயகியாகவும் நடித்துள்ளனர். உதய் என்பவர் இசை அமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களில் கவிஞர் கார்த்திக் நேத்தா மூன்று பாடல்களையும், தனிக்கொடி ஒரு பாடலையும், ராஜா குருசாமி ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, ஜாக்குவார் தங்கம், நடிகை ஊர்வசி, ஆசிரியை சபரிமாலா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் கலையரசன், சாதியை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று கூறினார். தொடர்ந்து இயக்குநர் பேரரசு பேசுகையில், சாதி ஒழிய காதலிப்பது சிறந்தது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.