இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஒரு படத்தை எதிர்பார்திருத்தனர். அதன்படி சமீபத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. அதில், நடிகர் அருண் விஜய்யின் மகன் அப்பாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக என்டிரி கொடுத்துள்ளார். அதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், மிகவும் மகிழ்ச்சியுடன் தனது மகனைப் படக்குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.