நினைவை தொலைத்து கனவில் தேடும் 'குதிரைவால்' டீசர் வெளியீடு! - இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பு நிறுவனம்
சென்னை: கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
![நினைவை தொலைத்து கனவில் தேடும் 'குதிரைவால்' டீசர் வெளியீடு! குதிரைவால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:29:44:1603385984-kuthuiraival-1-2210newsroom-1603385949-768.jpg)
குதிரைவால்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
இவற்றைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த திரைப்படம் 'குதிரைவால்'. கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இன்று (அக்டோபர் 22) இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.