தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேஜிக்கல் ரியாலிச சினிமா.. மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால்! - மேஜிக்கல் ரியாலிச சினிமா குதிரைவால்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும குதிரைவால் திரைப்படம் மார்ச் 18இல் வெளியாகிறது.

Kuthiraivaal movie releasing in theatres from March 18th, மேஜிக்கல் ரியாலிச சினிமா.. மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால், Kuthiraivaal , மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால்!
Kuthiraivaal , மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால்!

By

Published : Mar 7, 2022, 1:03 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவற்றைத் தொடர்ந்து குதிரைவால்' படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. .

கலையரசன் நடித்திருக்கும் இந்த படத்திற்குப் பிரபல பாடகர் பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.ராஜேஷ் கதை எழுதியுள்ளார்.

மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால்!

உளவியல் சிக்கல்கள், ஆழ்மனக் கற்பனைகள், டைம் டிராவல் ஆகியவை குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இத்திரைப்படம் இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மார்ச் 18ல் வெளியாகும் குதிரைவால்!

மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷியாம்.

இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும், விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாகப் பொதுமக்களுக்காகத் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தைத் தரும் என்கிறார்கள். மார்ச் 4 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: சினிமாவுக்கு வர விடாமல் பலரைத் தடுத்திருக்கிறேன் - பா. இரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details