ரஜினிகாந்த் துக்ளக் விழாவில், பெரியார் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், அதற்கான ஆதாரத்தைக் காண்பித்து பேசினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளன. இந்த நிலையில் ரஜினி காந்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து நடிகை குஷ்பூ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தவறோ, சரியோ. அது அவரின் தனிப்பட்ட கருத்து.
அவர் தனது நிலைப்பாட்டில், உறுதியாக இருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அனைவருக்கும் தேவையான ஒரே விஷயம் நேர்மை. பயத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள்... உங்கள் மனசு என்ன சொல்கிறதோ.. அதைப் பேசுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.