தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் பேச்சை அவர் ரசித்துக் கேட்பார்' - திருமணம் வாழ்க்கை குறித்து குஷ்பு நெகிழ்ச்சி - குஷ்பூ - சுந்தர். சி

சுந்தர். சி உடனான தனது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து நடிகை குஷ்பூ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

20 வருட திருமணம் வாழ்க்கை குறித்து குஷ்பு நெகிழ்ச்சி
20 வருட திருமணம் வாழ்க்கை குறித்து குஷ்பு நெகிழ்ச்சி

By

Published : Mar 9, 2020, 10:59 AM IST

நடிகை குஷ்பூ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார். இவருக்கும் நடிகரும், இயக்குநருமான சுந்தர். சி-க்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் சுந்தர். சி-குஷ்புவுக்கு திருமணமாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இந்த 20 ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை. இன்றைய நாள் வரை நான் பேசுவதைச் சிரித்துக்கொண்டே ரசித்துக் கேட்பீர்கள்.

தனது சொந்த திருமணத்திற்கு தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான். இனிய திருமண நாள் வாழ்த்துகள் எனது பலமே'' என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பூவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:காபியைவிட ஸ்ட்ராங் எனது இடுப்பு - சம்யுக்தா ஹெக்டேவின் ஆச்சர்ய புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details