'எட்டு தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஶ்ரீகணேஷ். இவர் தற்போது அதர்வா-பிரியா பவானி சங்கரை வைத்து 'குருதி ஆட்டம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ராக்போர்ட் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன.