தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

களைகட்டும் குறளரசன் திருமணம்: மகனுடன் சென்று சிவக்குமார் குடும்பத்துக்கு அழைப்பு விடுத்த டி.ஆர்!

டி. ராஜேந்தர், தனது மகன் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

kuralarasan marriage tr rajender invite sivakumar

By

Published : Apr 13, 2019, 8:20 AM IST

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். இவர் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவர் காதலித்த நபீலா அஹமத் என்ற பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக இவர் பிப்ரவரி 16ஆம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரது திருமண வரவேற்பு வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், திருமண விழாவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்களை அழைக்கும் பணியில் டி.ராஜேந்தர் மும்முரமாகியுள்ளார். அதன்படி டி.ஆர் மற்றும் குறளரசன் ஆகியோர் நேற்று சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை அவர்களது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details