தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நரேன் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்த கார்த்தி! - நரேன் போஸ்டர்

நடிகர் நரேன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசளிக்கும் விதமாக 'குரல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி வெளியிட்டுள்ளார்.

நரேன் - கார்த்தி
நரேன் - கார்த்தி

By

Published : Oct 7, 2021, 10:29 PM IST

'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நரேன். இவர் தற்போது மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்க பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

குரல் போஸ்டர்

இந்நிலையில் குரல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். நரேன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. 'கைதி' படத்திற்கு பிறகு நரேன் நடித்துள்ள குரல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:'அண்ணே யாரண்ணே மண்ணுல'... வெளியானது உடன்பிறப்பே சிங்கிள்

ABOUT THE AUTHOR

...view details