இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'தன்ஹாஜி' திரைப்படம் மாபெரும் வசூலை வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து இயக்குநர் ஓம் ராவத் தற்போது பிரபாஸை வைத்து, ’ஆதிபுருஷ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மிக பிரமாண்ட பொருள்செலவில் உருவாகும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் சீதா கதாபாத்திரத்தில் நடிகை கிருதி சனான் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து சமீபத்தில் கிருதி சனான் பேட்டியளித்துள்ளார். அதில், “என் மனதிற்கு மிகவும் நிறைவான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்து வருகிறேன். இந்தக் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக எடுக்கவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமப்பட்டுள்ளோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பிரபாஸ் குறித்துப் பேசிய அவர், ”நான் அவரை முதலில் சந்தித்தபோது, அவர் கூச்ச சுபாவம் கொண்டவர் என நினைத்தேன். ஆனால் நாங்கள் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் அப்படி இல்லை என்று நான் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு உணவுப் பிரியர். அதுமட்டுமில்லாமல் பிரபாஸ் சக நடிகர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் விரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார்.