பாலிவுட் நடிகை கிரிதி கர்பந்தா படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அவ்வப்போது சமுகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது, அவர் உடமைகளை தொலைத்துவிட்டதாகக் கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘உங்கள் விமானத்தில் வந்து, எனது உடமைகளை மிஸ் செய்துவிட்டேன். மேலும் உங்கள் ஊழியர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அடிப்படை விஷயங்கள் குறித்து சொல்லிக்கொடுங்கள்' என்று பதிவிட்டார். இதற்கு மன்னிப்பு தெரிவித்த அந்நிறுவனம், 'தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உடமைகளின் விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டனர்.