தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

26 ஆண்டுகளுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் கோவை சரளா - kovai sarla movies

நடிகை கோவை சரளா 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

கோவை சரளா
கோவை சரளா

By

Published : Oct 22, 2021, 6:59 AM IST

தமிழில் கடந்த 1979இல் வெளியான 'வெள்ளிரதம்' படம் மூலம் அறிமுகமானவர் கோவை சரளா. நகைச்சுவை நடிகையாக வலம் வரும் இவர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'சதிலீலாவதி' படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகையாக வலம் வரும் இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இப்படத்தை இயக்குகிறார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கி தரும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்கமுழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பிரேக்கிங் நியூஸ் - ரோபோக்களுடன் சண்டை போட்ட நடிகர் ஜெய்

ABOUT THE AUTHOR

...view details