பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான படம் 'கூழாங்கல்'. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் , ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில்’ நாளை (ஜுன்.12) முதல் வரும் 20ஆம் தேதி வரை திரையிடப்பட உள்ளது. இதனை விக்னேஷ் சிவன் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.