தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள படம் கோமாளி. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என பார்த்திபனிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இவர், தன்னுடைய 25+ 25 +25 படத்தின் கதையைத்தான் பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற பெயரில் இயக்கியுள்ளார் என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
'கோமாளி படத்தின் கதை பிரச்னை விரைவில் தீர்வு!' - 100% காதல் இசை வெளியீட்டு விழா
சென்னை: '100% காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ், 'கோமாளி படத்தின் கதை பிரச்னைக்கு இன்னும் ஓரிரு நாள்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்' எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ்
இந்நிலையில், நேற்று சென்னை பிரசாத் லேபில் '100% காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ், கோமாளி படத்தின் கதை பிரச்னை தொடர்பாகவும் பேசினார். அப்போது கோமாளி படத்தின் புகார் குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கதை குறித்த சாராம்சத்தை கேட்டுவருவதாகக் கூறினார். மேலும், இன்னும் ஓரிரு நாள்களில் கோமாளி படத்தின் கதை தொடர்பான சிக்கல்கள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.