தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அபியும் நானும், தங்க மீன்கள் வரிசையில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் படம்! - KOllywood upcoming movie Raja Magal teaser songs to be released soon

மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் மிடில் கிளாஸ் தந்தையின் கதையாக உருவாகியுள்ளது 'ராஜா மகள்'.

ராஜா மகள்
ராஜா மகள்

By

Published : Jul 2, 2021, 2:02 PM IST

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ், அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ’ராஜா மகள்’.

இப்படத்தில் ’ஆடுகளம்’ முருகதாஸ், ’கன்னிமாடம்’ புகழ் வெலினா, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், பேபி பிரிதிக்சா, ஈஸ்வர், மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராஜா மகள்

நிக்கி கண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவனின் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

”பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது” என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

’ராஜா மகள்’ போஸ்டர்

அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்து, அழகான கலகலப்பான படமாக படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குநர் ஹென்றி.

ராஜா மகள்

முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மகாபலிபுரம், திருத்தணி போன்ற பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது முழுவதுமாக படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாக உள்ளன.

இதையும் படிங்க:"தேன்" - விருதை குறிவைத்து ஒரு தமிழ் சினிமா!

ABOUT THE AUTHOR

...view details