கடந்த ஆண்டு கரானோ காரணமாக அனைத்து துறைகளும் முடங்கிபோய் இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமா முற்றிலும் பாதிக்கப்பட்டது. சினிமா படப்பிடிப்புகள் இல்லாமல் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர். திரையரங்குகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் இன்று (ஜன. 1) புத்தாண்டை ஒட்டி ஏராளமான புதிய திரைப்படங்களின் அறிவிப்புகளும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், ட்ரெய்லர்களும் வெளியிடப்பட்டுவருகின்றன.