தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காட்டேரி பட ரிலீஸ் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது அதிருப்தி - Katteri team

கரோனா பரவலை காரணம் காட்டி காட்டேரி திரைப்படத்தின் வெளியிட்டுத் தேதியை ஒத்திவைத்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

By

Published : Dec 24, 2020, 3:59 PM IST

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், டிகே இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள காட்டேரி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இந்நிலையில், கரோனா பரவலை காரணம் காட்டி காட்டேரி படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”ஸ்டூடியோ கிரீனின் இந்த அறிவிப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சொந்த காரணங்களுக்காக படத்தை வெளியிடவில்லை என்று கூறியிருக்கலாம்.

அதைவிடுத்து கரோனா இரண்டாம் அலை என்ற தேவையில்லாத வதந்தியை பரப்புவது மிகவும் வருந்தத்தக்கது. மத்திய அரசின் சுகாதார வழிகாட்டுக்குழு, இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறது. தற்போது தான் மக்கள் திரையரங்கை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் மக்களை அச்சுறுத்தக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க:அந்தக் கண்ண பாத்தாக்கா.. ஐயம் அண்டர் அரஸ்ட் -கண்ணழகி தியாவின் கலக்கல் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details