உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
- ரஜினிகாந்த் - 50 லட்சம்
- சிவகார்த்திகேயன்- 10 லட்சம்
- விஜய் சேதுபதி- 10 லட்சம்
- சூர்யா, கார்த்தி- 10 லட்சம்
- வெற்றிமாறன்- 2 லட்சம்
- ஹரிஷ் கல்யாண்- 1 லட்சம்
- நரேன்- 25,000
- ரோஷன்- 17,000
- சச்சு- 10,000
- பார்த்திபன்- 250 அரிசி மூட்டைகள்
- கலைப்புலி எஸ் தாணு- 250 அரிசி மூட்டைகள்
- பிரகாஷ் ராஜ்- 150 அரிசி மூட்டைகள்