தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்! - இந்தியன் 2 விபத்து

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்!
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்!

By

Published : Feb 20, 2020, 6:45 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்றிரவு இந்தியன் பட ஷூட்டிங்கில் எதிர்பாராதவிதமாக விபத்து நடைபெற்றது.

லைட்டிங் அமைப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த கிரேன் பாரம் தாங்காமல் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், படக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணா, சந்திரன், மது அகிய முன்று பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட்டின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும், ஆறுதல் தெரிவித்து தங்களின் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர். அப்பதிவுகள் கிழே வருமாறு.

இதையும் படிங்க:'இந்தியன் 2' படப்பிடிப்புத்தள விபத்தில் இறந்தவர்களுக்கு கமல் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details