நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொலையுதிர் காலம்'. தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தமிழில் நயன்தாரா, இந்தியில் தமன்னா நடித்துள்ளனர்.
'கொலையுதிர் காலம்' வெளியீட்டு தேதி மாற்றம்! - nayanthara
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு உரிமை பெறாமல் வாங்கியிருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 'கொலையுதிர் காலம்' படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பு காப்புரிமை சட்டத்தில் பதியப்படவில்லை. அதனால் இந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இந்த திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட சூழலில் தற்போது ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.