தியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கொலைகாரன்.
விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரைலர் 24ஆம் தேதி வெளியீடு - andreu louis
இயக்குநர் ஆண்ட்ரூவ் லூயில் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலைகாரன்' படத்தின் டிரைலர் வரும் 24ஆம் தேதி வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கொலைகாரன் டிரைலர் வெளியீடு போஸ்டர்
இந்தப் படத்தில் ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குரு சோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் ஆகியோருடன் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையவுள்ள நிலையில், வரும் மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.