தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

40 ஆண்டுகள் கடந்த பாலுமகேந்திரா படத்தைக் கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்! - Latest kollywood news

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான கோகிலா திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை கொண்டாடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கோகிலா
கோகிலா

By

Published : Sep 20, 2020, 4:05 PM IST

பாலுமகேந்திரா திரைக்கதை எழுதி, இயக்கிய கோகிலா திரைப்படம் கடந்த 1977ஆம் ஆண்டு வெளியானது.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இதில் ஷோபா கதாநாயகியாக நடித்தார். இப்படம் மூலம் நடிகர் மோகன் அறிமுகமானார்.

கன்னடத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தமிழில் டப்பிங் செய்யப்படாமல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. சுமார் 100 நாள்கள் திரையில் ஓடி இத்திரைப்படம் சாதனை படைத்தது. இந்த படத்திற்குச் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் இந்தப் படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி.என். ஃபிலிம் விரைவில் ஒரு கவித்துவமான நாவல் படைப்பு ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details