தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆறாவது விரல் வந்தது எப்படி? கிம்மை கலாய்த்த ரசிகர்கள் - கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம்

லாஸ் ஏஞ்சலிஸ்: ஐந்து விரல்கள் மட்டும் இருந்த கால்களில் தற்போது ஆறாவதாக திடீரென ஒரு விரல் வளர்ந்துள்ளது. இவ்வளவு மோசமான எடிட்டிங் செய்ய உங்களால் மட்டுமே முடியும் என கிம் கர்தாஷியனை வரிந்து கட்டி கலாய்த்துள்ளனர் இணையவாசிகள்.

Kim, Kylie mocked after suspected photoshop gaffe

By

Published : Aug 22, 2019, 5:53 PM IST

மேசமான போட்டாஷாப் எடிட்டிங் செய்திருப்பதாக கூறி ஹாலிவுட் டிவி பிரபலம் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி கெயில் ஜென்னரை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

வரிசையாக விதிவிதமான போட்டோக்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளும் ஹாலிவுட் பிரபலங்களான கிம் சகோதரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தனர்.

கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி கெய்லி ஜென்னர் ஆகியோர் பிகினி போன்ற கவர்ச்சி ஆடை அணிந்து பூனை நடை நடப்பது போல் புகைப்படம் அமைந்திருந்தது. அதில், கிம்மின் இடது காலில் ஆறாவது விரல் இடம்பிடித்திருந்தது.

கேகேடபில்யூ என்ற பெயரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தும் கிம் கர்தாஷியன், அதனை பிரபலப்படுத்தும் விதமாக தனது தங்கை கெய்லியுடன் இணைந்து பல்வேறு விதமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டிருந்தார்.

அதில், எனக்கு பிடித்த பிங்க் நிறத்தை கெய்லி அணிந்துள்ளார். அவருக்கான வாசனை திறவியத்தை கண்டறிவது சிரமம். ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து, கேகேடபில்யூ.காம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த இணையவாசிகளுக்கு திடீரென கிம் காலில் வளர்ந்துள்ள ஆறாவது விரல் மீது பார்வை பட வரிசையாக கலாய்க்க தொடங்கினர்.

எப்படி திடீரென உங்கள் காலில் ஆறாவது விரல் வளர்ந்திருக்கிறது என்று ஒரு ரசிகர் கேட்க, மற்றொருவரோ ஆகஸ்ட் 11ஆம் தேதி கிம் பதிவிட்ட போட்டோவில் அவருக்கு ஐந்து விரல்கள்தான் இருந்தன. ஆனால் தற்போது மோசமான எடிட்டிங்கால் ஆறாது விரலை இணைத்து குழப்பமடைய வைத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிம் சகோதரிகளின் பிரதிநிதி ஒருவர், இது எடிட்டிங் இல்லை எனவும், மாயத்தோற்றம்தான் எனவும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details