இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
தற்காலிகமாக '#RC15' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.
இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். கியாரா அத்வானி இன்று (ஜூலை 31) தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைக்க தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், விரைவில் #RC15' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பவன் கல்யாண் காரு செயல் என்னை ஈர்த்தது...இப்போ நானும் செய்றேன் - ராம்சரண்