ஆண்டுதோறும் புகைப்படக் கலைஞரான டபூ ரத்னானி, பாலிவுட் பிரபலங்களை வைத்து காலண்டர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான போட்டோ ஷூட்டில், நடிகைகள் சன்னி லியோன், கியாரா அத்வானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் நடிகை கியாரா அத்வானி ஒரே ஒரு இலையை மட்டும் பிடித்துக் கொண்டு, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் இப்புகைப்படம் திருடப்பட்டு எடுக்கப்பட்டதாக இணையத்தில் செய்தி பரவியது.