அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ரஜினியின் ஹிட் பட்டியலில் குஷ்புவின் பங்களிப்பும் உள்ளது. ரஜினியுடன் ஆன்ஸ்கிரீனில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் குஷ்பு. இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் ‘அண்ணாத்த’. இதில் மீனாவும் ரஜினியுடன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் 90 சதவிதம் முடிவுற்ற நிலையில், டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளன.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாத்த டப்பிங் பணி வெகு விரைவில் தொடங்கவுள்ளது. ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரை மீண்டும் ஆக்ஷனில் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.