நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கே.ஜி.எஃப்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று நான்கு மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக, 'ராக்கி பாய்' என்ற பெயரில் தமிழ்நாடு இளைஞர்கள் மனதில் யாஷ் இடம்பிடித்துவிட்டார்.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று 'கே.ஜி.எஃப்' படத்தை அனுமதியின்றித் தொடர்ந்து ஒளிபரப்பி வந்துள்ளது. இதுகுறித்து 'கே.ஜி.எஃப்' படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கார்த்திக் கவுடா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.