தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கறுப்பு கண்ணாடி...கையில் வாள் ஏந்தி மாஸாக வரும் ஆதிரா: 'கே.ஜி.எஃப் 2' புது போஸ்டர்! - கே.ஜி.எஃப் 2 போஸ்டர்

இந்தியத் திரையுலகமே எதிர்நோக்கும் 'கேஜிஎஃப் 2' படத்தில் நடிகர் சஞ்சய்தத் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

KGF
KGF

By

Published : Jul 29, 2021, 12:52 PM IST

கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான படம் 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் தேசிய விருது பெற்றது.

இப்படத்தின் முதல் பாகம் அடைந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்கிற கதையாக இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியான சில நாட்களிலேயே அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியிட்டிற்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், சஞ்சய் தத் இன்று (ஜூலை.29) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பரிசு கொடுக்கும் விதமாக 'கே.ஜி.எஃப்' படக்குழுவினர் 'ஆதிரா' கதாபாத்திரத்தின் புகிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் ஆதிராவன சஞ்சய் தத் கையில் வாளுடன் கருப்பு கண்ணாடியுடன் கூட்டத்திற்கு நடுவே மாஸாக நடந்து வருவது போல் உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் 'கே.ஜி.எஃப் 2' படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'கேஜிஎஃப் 2' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிதளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றியது.

'கேஜிஎஃப் 2' படத்தினை முதலில் படக்குழுவினர் ஜூலை 16ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இதன் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 21ஆம் தேதி திரையில் வெளியிட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கே.ஜி.எஃப் 1' திரைப்படம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் தள்ளிப்போகும் 'கேஜிஎஃப் 2' ரிலீஸ் தேதி?

ABOUT THE AUTHOR

...view details