தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2021, 6:09 PM IST

ETV Bharat / sitara

யூ-ட்யூபில் புதிய சாதனைப் படைத்த 'கேஜிஎஃப் 2'

'கேஜிஎஃப் 2' படத்தின் டீசர் யூ-ட்யூப் தளத்தில் 80 லட்சம் லைக்குகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது.

கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் 2

நடிகர் யாஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனைப் படைத்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கேஜிஎஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இதில் நடிகர் யாஷுடன் இணைந்து சஞ்சய் தத் நடித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

'கேஜிஎஃப் 2' படம் இன்று (ஜூலை 16) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போதுவரை யூ-ட்யூப் தளத்தில் இரண்டு கோடி (200 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதேபோல் 80 லட்சம் (8 மில்லியன்) லைக்குகளும், 10 லட்சம் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளன.

80 லட்சம் லைக்குகளைக் கடந்த முதல் டீசர் என்ற சாதனையை 'கேஜிஎஃப் 2' திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

இதையும் படிங்க:சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கும் டாப்சி

ABOUT THE AUTHOR

...view details