தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

களமிறங்க தயாரான ’கேஜிஎஃப்- 2' - சினிமா செய்திகள்

ஹைதராபாத் : பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத், கன்னட நட்சத்திரம் யாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப் சேப்டர் 2 படக்குழுவினர்
கேஜிஎஃப் சேப்டர் 2 படக்குழுவினர்

By

Published : Dec 20, 2020, 6:02 PM IST

2018ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. யாஷ் நடித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அத்தனை மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தது போலவே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேஜிஎஃப் சேப்டர் 2 படக்குழுவினர்

இந்நிலையில், கரோனாவால் தடைப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக மீண்டும் தொடங்கியது. இதில் நிறைவடையாமல் இருந்த சஞ்சய் தத், யாஷ் மோதும் கிளைமாக்ஸ்சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்தக் காட்சிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில், படக்குழுவினரின் சில புகைப்படங்களோடு பதிவிட்டுள்ளார்.

அதில், “மகிழ்ச்சி, கடின உழைப்பு என எதற்கும் குறைவில்லாத திருப்திகரமான படப்பிடிப்பு. சிரத்தையுடன் பணியாற்றிய படக்குழுவிற்கு தலை வணங்குகிறோம். சஞ்சய் தத், நிஜ வாழ்க்கையிலும் மாவீரர் தான். க்ளைமேக்ஸ் காட்சிகளில் யாஷின் நடிப்பு ரசிகர்களைக் கவரும். கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை வெள்ளித்திரையில் காண இனியும் காத்திருக்க முடியாது” எனத் தனது ட்விட்டர் பதிவில் உற்சாகம் குறையாமல் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேஜிஎஃப் 2 படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 21 அன்று காலை 10.08 மணிக்கு அனைவருக்கும் எங்கள் குழுவிலிருந்து சிறப்பான செய்தி ஒன்று கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பிக்கலாங்களா?!

இந்நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி 'கேஜிஎஃப்'வெளியானது. அதேபோல் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details