பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்.'. நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகி 100 கோடி மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப்.' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகுவதாக இருந்த இப்படம் கரோனா பரவல் காரணமாகத் தள்ளிப்போனது.
இந்நிலையில் யாஷ் இன்று (ஜனவரி 8) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்குப் பரிசு கொடுக்கும்விதமாகப் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
அதில், "ஆபத்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கே.ஜி.எஃப். படம் திரையரங்குகளில் வெளியாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இரவோடு இரவாக ஹேக் செய்யப்பட்ட 15 யூ-ட்யூப் சேனல்கள்