கடந்த ஆண்டு கன்னடத் திரையுலகிலிருந்து பிரமாண்டமாக வெளியானது கேஜிஎஃப். இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதில் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் விருதுபெற்றது.
தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவருகிறது. இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்திவருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதனையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கேஜிஎஃப் சேப்டர் 2 - பேரரசின் மறு உருவாக்கம் என்று எழுதியுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது பாகுபலியின் முதல் பாகத்தில் வரும் காட்சி நினைவுக்குவருகிறது.
வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் '#KGFChapter2FirstLook' என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.