கோவை: 2021ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என பிரபல கேரளா குரல் ஜோதிடர் கணித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் பிரபல ஜோதிடராக திகழ்பவர் ஜெயப்பிரகாஷ் குட்டி. இவரது தந்தை டி. எம். ஆர். குட்டி சுவாமிஜி இந்தியாவில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்தார்.
தனது தந்தை மறைவிற்கு பிறகு தற்போது ஜெயப்பிரகாஷ் குட்டி பாலக்காடு மாவட்டம் பண்ண காட்டேரி கொல்லங்கோடு பகுதியில் முருகன் கோயிலை நிர்வகித்து ஜோதிடம் பார்த்துவருகிறார்.
ஒருவரது குரலை வைத்து ஜோதிடம் பார்க்கப்படும் புதிய முறை தற்போது கேரளாவில் பிரபலமாகிவருகிறது. குரல் ஜோதிடம் என்று அழைக்கப்படும் இந்த முறையில் பொதுமக்களுக்கு ஜோதிடம் பார்த்து வருகிறார் ஜெயப்பிரகாஷ் குட்டி.