தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மகாநடி' கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! - மிஸ் இந்தியா

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

keerthy suresh

By

Published : Sep 13, 2019, 9:15 AM IST

தமிழில் விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழல் மட்டுமில்லாது தெலுங்கிலும் நடித்துவருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநடி' படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் நடித்த கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து இந்தியில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் 'மைதான்' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் அறிமுக இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் 'மிஸ் இந்தியா' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்தியுள்ளது. தற்காலிமாக இப்படத்திற்கு '#கீர்த்தி சுரேஷ் 24' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'மேயாத மான்', 'மெர்குரி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details