தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யூ-ட்யூப் போதை யாரைவிட்டது... சேனல் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்! - நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிதாக யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

By

Published : Jan 26, 2022, 9:04 PM IST

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழ், தெலுங்கு எனப் பலமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தற்போது ஏராளமான திரைப்படங்களைக் கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் இவர் செல்வராகவனுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், டொவினோ கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே திரைப்பிரபலங்கள் பலரும் யூ-ட்யூப் சேனல் ஆரம்பித்து, தங்களது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிய யூ-ட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், வீடியோ லிங்க் ஒன்றை இணைந்துள்ளார்.

யூ-ட்யூப் சேனல் ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details