கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் OTTயில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பெண்குயின்'. இந்தத் திரைப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'தாயின் பயணம் இங்கு தொடங்குகிறது'- பெண்குயின் ட்ரெய்லரை வெளியிட்ட தனுஷ் - பெண்குயின் ட்ரெய்லரை வெளியிட்ட தனுஷ்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து, ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய 'பெண்குயின்' திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
keerthy suresh starrer Penguin trailer launched by dhanush
சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் படத்தின் ட்ரெய்லரை நானியும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.