நாடு முழுவதும் கரோனா தொற்றின் மூன்றாம் அலை வெகு வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வரிசையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.18) கரோனா தொற்று நீங்கி குணமடைந்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.