தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவரை நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெண் மருத்துவரை எரித்துக்கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நடிகை கீர்த்தி சுரேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு எனது இதயமே பதறிப்போனது.