தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவர் 168' குழுவில் இணைந்த 'மகாநடி' - தலைவர் 168 இல் கீர்த்தி சுரேஷ்

'தலைவர் 168' படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Keerthy Suresh
Keerthy Suresh

By

Published : Dec 10, 2019, 8:01 AM IST

ரஜினியின் 168ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். முன்னதாக 'எந்திரன்', 'பேட்ட' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ரஜினியுடன் மூன்றாவது படத்தினை தயாரிக்கவுள்ளது.

இயக்குநர் சிவா, நடிகர் கார்த்தியை வைத்து 'சிறுத்தை' படத்தினை இயக்கினார். அதனையடுத்து, 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என அடுத்தடுத்து அஜித்தை வைத்து இயக்கினார். தற்போது ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இப்படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, இப்படத்தில் தேசிய விருது பெற்று நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

தலைவர் 168 படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘நான் பெரிய ரஜினி ரசிகை. ஆனால் இப்போது ரஜினியுடன் நடிக்கிறேன். இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ், இயக்குநர் சிவா ஆகியோருக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details