தமிழில் விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழல் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநதி' படத்துக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் நடித்த கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
தொடர்ந்து இந்தியில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் 'மைதான்' என்ற படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் அறிமுக இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் 'மிஸ் இந்தியா' திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்தியது. தற்போது கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு 'பெண் குயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் கீர்த்தி சுரேஷூக்கு 24ஆவது படமாகும்.
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சி அளிப்பதால், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'மேயாத மான்', 'மெர்குரி' ஆகிய திரைப்படங்கள் தயாரித்த கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதையும் வாசிங்க: ஸ்டோன் பெஞ்ச் திரைப்பட குழுவின் 3ஆவது படம் அறிவிப்பு