தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
‘மகாநடி’ திரைப்படத்துக்காக தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல திரைப்படப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து தற்போது இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அப்படக்குழு பாடல் ஒன்றின் டீசரை வெளியிட்டுள்ளது. அப்பாடலை தமன் இசையமைத்து ட்வீட் செய்திருந்தார்.