இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் உளவியல் திரில்லர் படம் 'பெண்குயின்'. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு! - கீர்த்தி சுரேஷின் பெண்குயின்
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகியுள்ள 'பெண்குயின்' படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது.
பெண்குயின்
இப்படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகும் என, அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அமேசான் பிரைமில் ஜூன் 19 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.